மிருசுவில் – வாள்வெட்டுக் குழுவினர் நள்ளிரவுநேரம் அட்டகாசம்

அண்மைக்காலமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் நாசகார செயற்காடுகளிலும் கொள்ளை மற்றும் வாள்வெட்டுக்களில் ஈடுபட்டுவருகின்ற தேசவிரோத குழுக்கள் எனச் சந்தேகிக்கப்படுகின்ற இனந்தெரியாத குழுவினர் தென்மராட்சி மிருசுவில் தெற்கில் உள்ள சில குடியிருப்புக்களுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் சில வாகனங்களையும் சேதமாக்கியதுடன் அப்பிரதேச மக்களை அச்சுறுத்தியும் சென்றுள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது.

02.08.2018 நேற்று வெள்ளிக்கிழமை இரவு வடக்கு வீதி மிருசுவிலில் உள்ள தம்பு ஜெயானந்தம் என்பவரது வீட்டுக்குள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் பொல்லுகளுடன் வந்த இனந்தெரியாத பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொண்ட குழுவினர் வீட்டில் இருந்தவர்களையும் அயல் வீட்டில் வசித்தவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர் அப்போது அயலில் உள்ளவர்கள் கூக்குரல் இட்டதுடன் கிராமமக்கள் ஒன்றுணைந்து அவர்களை விரட்டிச்சென்றபோது வீதியால் உழவு இயந்திரத்தில் பயணித்த பாலேந்திரன் றஜீபன் என்பவரை தாக்கியதுடன் அவரது உழவு இயந்திரத்தையும் சேதமாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். தொடர்ந்து மிருசுவில் பகுதி இளைஞர்கள் கொடிகாம பொலீசாருடன் இணைந்து அக்குழுவினரை விரட்டிச்சென்றபோது அவர்கள் பயணித்த காரினுடைய சக்கரம் ஒன்று காற்றுப்போனதனால் காரினை கைவிட்டு விட்டு தப்பிச்சென்றுவிட்டனர். கார் பொலீசாரினால் கைப்பற்றப்பட்டு கொடிகாமம் பொலீஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

அக்காரினுடைய உரிமையாளர் சரசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த அருட்சோதி பிரசன்னா என அடையாளம் காணப்பட்டுள்ளது.  கார் வாடகைக்கு கொடுக்கப்பட்டதாக உரிமையாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இன்று அதிகாலை கொடிகாமம் பொலிசாரினால் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைவரும் விரைவில் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கொடிகாமம் பொலீஸ் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் பிரதேச மக்களை மதட்டத்திற்கு உள்ளாக்கியதுடன் இளைஞர்கள் ஒன்றுணைந்து காலைவரை பொலீசாருடன் இணைந்து காவல்கடமையில் ஈடுபட்டனர்.

மேற்படி சம்பவத்தில் வடக்கு வீதி மிருசுவிலைச்சேர்ந்த தம்பு ஜெயானந்தன் (வயது 57) படுகாயமுற்றநிலையில் யாழ்போதனா வைத்தியசாலையிலும், ஆயத்தடி மிருசுவிலைச்சேர்ந்த பாலேந்திரன் றஜீபன் (வயது 23) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குற்றச் செயலுக்குப்ப யன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட காரினுடைய புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 186

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*