யாழில் S-DIG வாகனப் பேரணி

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு  மக்களின் உதவியை நாடி பொலிஸார் சற்றுமுன்னர் வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகரில் பேரணி இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண  பொலிஸ் உயர் அதிகாரிகள்  மற்றும் பொலிஸார் இணைந்து வாகனங்களில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வுத் துண்டு அறிக்கைகளையும் விநியோகித்து வருகின்றனர்.

வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றோசான் பெனான்டோ மிகவும் மதிப்பு மிக்கவர் ஆனால் அவர் தவறான முறையில் வன்முறைகளுக்கும் சதிகளுக்கும் துணை போகின்றார்.

யாழ் குடாநாட்டில் வன்முறைகளை நிறுத்த வேண்டுமாக இருந்தால் முதலில் 2015ம் ஆண்டுக்குப் பின்னர் கஞ்சா கடத்துவதற்காகவும் வன்னியில் இருந்து திருட்டு மரங்கள் யாழுக்கு கடத்துவதற்காக நெல்லியடி செல்வா குழுவால் பலாளி இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்து அகற்றப்பட்ட ஆனையிறவில் அமைந்திருந்த 24 மணிநேர சோதனை சாவடி மீண்டும் நிறுவப்படல் வேண்டும். அதேபோல பூனகரி பாலத்தருகில் 24 மணிநேர சோதனை சாவடி அமைக்கப்படல் வேண்டும். இந்த இரண்டு சோதனை சாவடியும் அனைத்து வாகனங்களும் அனைத்துப் பயணிகளும் அனைத்துப் பொருட்களும் சோதனை செய்ய வேண்டும்.

இராணுவத்தின் பெயரை சொல்லி நடமாடும் திருட்டு மணல் கும்பல் கஞ்சா கும்பல் போன்றவற்றை இயக்கும் ஏ.செல்வா குழுவை கைது செய்ய வேண்டும். இந்த இரண்டு சோதனை சாவடியிலும் மோப்ப நாய்கள் பயன்படுத்தவேண்டும். இந்த இரண்டு சோதனை சாவடியிலும் யாழுக்கு வரும் குற்றம் செய்யும் கும்பலையும் கைது செய்ய முடியும். அவ்வாறே யாழில் இருந்து திருடப்பட்டு கொண்டு செல்லப்படும் பொருட்கள் மீட்கமுடியும். இதை விடுத்து வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் எலிக்கும் பூனைக்கும் காதல் வேலை பாக்கும் செயலை நிறுத்த வேண்டும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 196

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*