யாழில் முச்சக்கர வண்டிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள்

1434126562yarlminnal.com (22)யாழ்.மாவட்டத்தில் பயணிகள் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு சித்திரை மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக மீற்றர் பொருத்தப்பட வேண்டும். என தெரிவித்திருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் என் வேதநாயகன், முச்சக்கர வண்டிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் மாலை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மாவட்டச் செயலர் மேற்படி விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் பயணிகள் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகள் அனைத்திற்கும் எதிர்வரும் சித்திரை மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக மீற்றர் பொருத்தப்பட வேண்டும்.

மீற்றர் பொருத்தாமல் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் முச்சக்கர வண்டிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. குறிப்பாக அதிக கட்டணம் அறவிடுவது தொடர்பாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன.

இந்த விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி உரிய தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம்.

எனவே உரிய நடைமுறை ஒழுங்குகளை சாரதிகள் பின்பற்ற வேண்டும். என கேட்டுக்கொள்ளுகின்றோம். இதனை மீறும் சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டினார்.

பயணிகள் பேருந்து சேவை தொடர்பாக,

இ.போ.ச பேருந்து சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் வடமாகாண ஆளுநர் பளிஹககாரவுடன் சந்திப்பை நடத்தியிருக்கின்றனர்.

இதன்போது மக்களுக்கான போக்குவரத்துச் சேவை யில் ஈடுபடுகின்ற சாரதிகள் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் சேவையில் ஈடுபடவேண்டும் என்பது தொடர்பாக ஆளுநர் இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு தவறும் சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் வடமாகாணத்தின் சகல பகுதிகளிலும் சாரதிகள் இனிவரும் காலங்களில் கண்காணிக்கப்படுவார்கள் எனவும்,

வடமாகாணத்தில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந் துகளுக்கிடையில் போட்டித்தன்மை அதிகரித்து ஒருவருக்கொருவர் முந்தி க்கொண்டு செல்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மேலும் போக்குவரத்து விதிகளும் கண்மூடித்தனமாக மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் போக்குவரத்து நேர ஒழுங்குகளும் சரி செய்யப்படுவதற்கான ஒழுங்குகளை ஆளுனர் மேற்கொண்டுள்ளார் என மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

Facebook Comments

Comments are closed.