சப்ரா சரா என்ற சரவணப்பொய் எப்படி தமிழ் மக்களை சூறையாடியது?

13450732_1554259344876701_3449589455111269467_nஇது ஒரு உண்மை விளக்கம்…..
மக்களே கேளீர்!….

ஆரம்பத்தில் உதயன் பத்திரிகை நிறுவனம் சப்றா சராவுக்கும்; முழுமையாக செந்தமானதல்ல. அது சப்றா சராவும், அவரின் மைத்துனன் வித்தியும் கூட்டுச் சேர்ந்து மோசடி செய்து அபகரித்துக் கொண்டது. அது மோசடி நிதி நிறுவனமான சப்றா நிதி நிறுவனத்தின் சொத்தாகும்.

சப்றா நிதிநிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் சப்றா சராவின் அக்காவை திருமணம் முடித்த பாலாவும், லண்டனுக்குப் படிக்கச் சென்று படிப்பை சரியாக முடிக்காமல் வெறும் கையோடு நாடு திரும்பி யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த சப்றா சராவும் இணைந்தே ஆரம்பித்திருந்தனர்.

அங்கேதான் சரா என்கின்ற குள்ளநரி தனது வேலையைத் தொடங்கியது. அதாவது சப்றாவின் பெயரால் யாழ்ப்பாண மக்களின் பணத்தை சுருட்டிக்கொள்வதற்கான திட்டமே அதுவாகும்.

சப்றாவில் யாழ்ப்பாண மக்கள் வைப்புச் செய்த பணத்தை முதலீடாகக் கொண்டு உமா எக்ஸ்போர்ட் எனும் நிறுவனத்தை ஆரம்பிக்கும் யோசனையை சப்றா சரா தனது மைத்துனனுக்கு கொடுத்தார். சப்றா சராவின் திட்டத்திற்கு அமையவே பாலா உமா எக்ஸ்போர்ட் நிறுவனத்தை ஆரம்பித்து அதன் நிர்வாக இயக்குநராக சப்றா சரா பொறுப்பேற்றார்.

உமா எக்ஸ்போர்ட் நிறுவனம் ஆரம்பித்ததற்கான நோக்கமே சப்றா நிதிநிறுவனத்தின் பணத்தை கை மாற்றுவதுதான். அந்தத் திட்டத்தை சப்றா சரா கட்டம் கட்டமாக செய்துகொண்டிருந்தார். சப்றா நிதியிலிருந்து உமா எக்ஸ்போட்டுக்கு திருடப்படும் பணத்தை மேலுமொரு முதலீடாக மாற்றுவதற்காகவே பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கும் திட்டத்தை மைத்துனர் பாலாவுக்கு சப்றா சரா கூறினார். சராவின் திட்டத்தை ஏற்றுக்கொண்டு உதயன் பத்திரிகையை ஆரம்பிக்கும் காய்களை நகர்த்தினார்கள்.

சப்றா நிதி நிறுவனத்தின் நிதியைச் சூறையாடி, உமா எக்ஸ்போர்ட்டின் முதலீட்டுடன் உதயன் பத்திரிகை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் பதிப்பில் பாலாவின் தந்தையான சன்முகத்தில் புகைப்படத்தை பிரசுரித்து அந்த நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவராக செய்தியும் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று நிறுவனங்களினதும் திரைமறைவு குள்ளநரித் தலைவராக சப்றா சரா இருந்தாலும் வெளிப்படையான தலைவராக பாலாவே இருந்தார். உதயன் பத்திரிகைக்கு ஆசியராக வித்தியை பாலா நியமித்தார். அதற்குக் காரணம் மைத்துனன் சப்றா சராவின் செயற்பாடுகளில் பாலாவுக்கு சில சந்தேகங்கள் எழுந்திருந்தது. அதைக் கண்காணிப்பதற்கு பொறுத்தமானவராகவே வித்தியை பாலா நியமித்திருந்தார். இதைத்தான் பாம்பின் கால் பாம்பு அறியும் என்று கூறுவார்கள்.

இதனால் சப்றா சராவுக்கும், வித்திக்கு இடையே ஆரம்பத்திலிருந்தே முரண்பாடுகள் தோற்றம் பெறத்தொடங்கின. பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு சரியாக ஒரு வருடத்தின் பின்னர் முரண்பட்டுக் கொண்டிருந்த சப்றா சரா, வித்தியின் தங்கையை திருமணம் செய்து தன்னைக் கண்காணிக்க வந்த வித்தியை மைத்துனனாக்கி மடக்கிய சப்றா சராவின் சாணக்கியத்தைக் கண்டு வித்தி வியந்துபோனார்.

அதன் பின்னரும் மைத்துனர்களான சப்றா சராவும், வித்தியும் தமக்குள் ஒற்றுமையாகி பாலா ஆப்படித்து உதயன் பத்திரிகையை முழுமையாக அபகரிக்கும் திட்டத்தைத் தீட்டினார்கள். அதற்கான சூழ்ச்சியை சப்றா சரா திட்டமிட்டார். வித்தி அதை நடைமுறைப்படுத்துவதாக இருவரும் இணக்கிக்கொண்டார்கள்.

அந்த சூழ்ச்சி என்னவென்றால் உதயன் பத்திரிகையை தீவிர புலிகள் ஆதரவு பத்திரிகையாக வித்தி நடத்துவதென்றும் அப்படி நடத்தும்போது இலங்கை அரசாங்கம் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் என்றவகையில் பாலாவை நெருக்கடிக்குள் தள்ளுவதுபோல் ஒரு பிரச்சினையை உருவாக்குவது, அந்த நெருக்குதலுக்கு முகம்கொடுத்தால் அது முதலுக்கே மோசமாகிவிடும், அதாவது உதயன் பத்திரிகையின் போக்கு சப்றா நிதி நிறுவனத்தைப் பாதித்துவிடும் என்று பாலாவுக்கு அச்சம் ஏற்படும் என்று சப்றா சரா திட்டமிட்டார்.

அக்காலட்டத்தில் யாழ்ப்பாணத்தில் முரசொலி, ஈழநாடு, ஈழமுரசு ஆகிய பத்திரிகைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தன. அவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய உதயன் பத்திரிகையை சப்றா நிதியிலிருந்து பெருமளவு பணத்தை செலவு செய்து தக்கவைப்பதிலும் சப்றா சரா ஈடுபட்டார்.

சப்றா சராவின் திட்டம் பலித்தது. புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட உதயன் பத்திரிகையின் நிதி மூலாதாரமான சப்றா நிதிக்கம்பனியின் அனுமதியை அரசாங்கம் இடை நிறுத்தியது. அப்போது சப்றாவுக்கும் உதயன் பத்திரிகைக்கும் இருந்த சட்டரீதியான தொடர்புகளை துண்டித்துவிட்டு உதயன் பத்திரிகையை தன்னிடம் தருமாறு பாலாவுக்கு சப்றா சரா ஆலோசனை கூறினார். அப்படிச் செய்தால் சப்றாவை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியதை நம்பி, உதயன் பத்திரியுடனான தொடர்பை சட்டரீதியாக துண்டித்து பத்திரிகை நிறுவனத்தை முழுமையாக சப்றா சராவிடம் ஒப்படைத்தார் பாலா. சப்றா சராவின் திட்டம் அவருக்கு வெற்றியாக அமைந்தது.

‘முதற் கோணல் முற்றும் கோணல்’ என்பதுபோல், யாழ்ப்பாண மக்களின் பணத்தை சப்றா நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்து அந்தப்பணத்தை அதிலிருந்து கொள்ளையடித்து உதயன் பத்திரிகை நடத்தியதுபோல், ஆரம்பத்திலேயே கொள்ளை நிறுவனமாக தொடங்கப்பட்ட உதயன் பத்திரிகை பின்நாளில் யாழ்ப்பாண மக்களுக்கு பொய்யான செய்திகளைக் கூறியும், தவறாக வழி நடத்தியும் பெரும் அழிவுகளுக்குள் மக்களை தள்ளிவிட்டது. இன்றும் கூட உதயன் பத்திரிகை சப்றா சராவின் சுயலாப அரசியலுக்காக அரசியல் காழ்ப்புணர்வுச் செய்திகளையே யாழ்ப்பாண மக்களுக்கு பரப்புரை செய்துவந்தாலும், அதன் வருமானம் மரணச் செய்திகளை வினம்பரம் செய்வதிலையே தங்கியிருப்பதை மக்கள் அறிவார்கள்.

அதன் பின்னர் சப்றா நிறுவனத்தை இழுத்து மூடும் சூழல் ஏற்பட்டது. அதிலிருந்த பணத்தை வேறு முதலீடுகளாகவும், சேமிப்பாகவும் எடுத்துக்கொண்ட சப்றா சராவின் நோக்கமும் சப்றாவை மூடிவிடுவதாகத்தான் இருந்தது. காகம் இருக்க பனம்பழம் விழுந்ததைப்போல் சப்றா நிதி நிறுவனத்தை மூடி விடுவதுதான்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உதயன் பத்திரிகை நிறுவனத்தை சப்றா சரா முழுமையாகக் கைப்பற்றிக்கொண்டார். சப்றா நிதி நிறுவனத்தின் பிரச்சினைகள் தலைதூக்கியபோது சப்றா சராவின் மைத்துனரான பாலா நாட்டைவிட்டு ஓடினார். தமது பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த மக்கள் சப்றா சராவை அணுகி தமது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது, தனக்கும் தெரியாது என்றும், தனது மைத்துனன் பாலா பணத்தைச் சுருட்டிக்கொண்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார் என்றும் சரா கையை விரித்தார்.

ஆனாலும் சப்றா சராவை விடாமல் விரட்டிய யாழ்ப்பாண மக்கள் உதயன் பத்திரிகையின் சொத்துக்களை விற்றாவது தமது பணத்தை திருப்பித்தர வேண்டும் என்று கேட்டபோது சப்றா சராவும் யாழ்ப்பாணத்தைவிட்டு இந்தியாவுக்கு ஓடி ஒழிந்தார். ஏற்கெனவே சப்றா நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த பணத்தை இந்தியாவிலும், கொழும்பிலும் பதுக்கியிருந்தா சப்றா சரா இந்தியாவுக்கு ஓடிவந்து நிதானமாகத் திட்டமிட்டு அங்கே ஒரு புகைப்பட ஸ்ரூடியோவைத் திறந்தார். அதேபோல் கொழும்பிலும் ஒரு ஸ்ரூடியோவைத் திறந்ததோடு, பெருமதியான நிலங்களையும் வாங்கினார். பும்பலப்பிட்டியில் சொகுசு வீடொன்றும் வாங்கியிருந்தார்.

மைத்துனனுக்கே ஆப்பு வைத்த சப்றா சராவை நம்பி உதயன் பத்திரிகையை அபகரிக்க உதவி செய்த வித்திக்கும் இறுதியில் பெரிய ஆப்பை சப்றா சரா சொருகினார் என்பதுதான் வித்தி எதிர்பார்க்காத அதிர்ச்சி.

வெறும் கையோடு யாழ்ப்பாணத்திற்கு வந்துசேர்ந்த சப்றா சரா, இப்போது மைத்ததுனர்களான பாலாவுக்கும், வித்திக்கும் மட்டுமல்ல யாழ்ப்பாண மக்களுக்கும் ஆப்படித்துத்தான் இன்று கோடீஸ்வர வர்த்தகராக யாழ்ப்பாணத்தில் வீ.ஐ.பிக்களையே வீட்டுக்கு அழைக்கும் சொகுசு வாழ்க்கையை சப்றா சரா வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*