யாழில் பல பிரதேச வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும்!

health-600x338யாழில் இந்த வருடத்தில் பல பிரதேச வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் பல வைத்தியசாலைகளில் புதிய கட்டிடங்களை அமைப்பதற்காக அரசாங்கம் 957 மில்லியன் ரூபாயினை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஒதுக்கப்பட்டுள்ள இந்தப் பணமானது வைத்தியசாலை உபகரணங்களைப் பராமரிக்கவும்,புதிய உபகரணங்களை கொள்வனவு செய்யவும்,புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கிராமிய வைத்தியசாலைகளில் அபிவிருத்தியும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.